Posts

Showing posts with the label Morals

'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!'

Image
  பறவைகள் பழங்காலந்தொட்டே மனிதர்களுடன் தொடர்பில் உள்ளவை.புறாக்கள் தகவல் தொடர்புகாக பயன்படுத்தப்பட்டது.காக்கை சமூக நல்லிணக்க குறியீடு ஆகும்.மேலும் காலையில்  விழிக்கையில் காக்கை,மைனா, குயில் மற்றும் குருவிகளின் ரம்மிய குரலில் மயங்கி   எழுகிறோம்.ஆனால் நாளடைவில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.மேலும் கோடை காலங்களில் பறவைகள் நீரின்றி உணவின்றி   சிரமப்படுகின்றன.கிரமங்களை விட நகரங்களில் உள்ள பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது.நகர வாசிகள் ஆகிய நாம் நம்மால் இயன்றதை செய்ய முற்படுவோம்.நம் முன்னோர்கள் பறவைகளுக்கு உணவிடும் நற்பண்புகள் கொண்டுருந்தனர்.அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறிப்பாக காக்கைக்கு உணவிடுவர்.அக்குறிப்பிட்ட நாட்களில் உணவிட்டாலே நன்மை ஏற்படும் என்பர்.நாம் அனைத்து நாட்களும் அவைகளுக்கு உணவு கிடைக்கும்படி செய்தால் அளவில்லாத நன்மை கிடைக்குமல்லவா!.மேலும் பறவைகள் தூய்மை பணியாளர்கள் ஆகவும் செயல்படுகிறது. நாம் தூக்கி எறியும் கழிவுகள் மற்றும் உயிரற்ற விலங்குகளின் உடல்கள் ஆகியவற்றை உண்டு சுத்தம் செய்கின்றது.மேலும் அவைகள் மரம் நடும் செயலையும் சிறப்பாக செய்...

கோபம் எதனால் வருகிறது?

Image
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு ...

Know your value...!

Image
A father before he died said to his son: “this is a watch your grandfather gave and this is more than 200 years old, but before I give it to you, go to the watch shop on the first street, and tell him I want to sell it, and see how much it is”. He went and then came back to his father, and said, "the watchmaker will pay 5 dollars because it's old”. He said to him : “go to the coffee shop”. He went and then came back, and said: “He will buy it for $5 father”. “Go to the museum and show that watch”. He went then came back, and said to his father “They offered me a million dollars for this piece”.  The father said: “I wanted to let you know that the right place values your value in a way right, don't put yourself in the wrong place and get angry if you don't. Who knows your value is who appreciates you, don't stay in a place that doesn't suit you". Know your value.

நம்பிக்கை

Image
யோசிக்க வைக்கும் சிறு கதை !!!         ஒரு இருட்டு அறை... அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.   அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன. காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.  அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!! அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.  கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது. என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது. அந்த போராட்டம் சில நிமிடங்...

வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பத்து சூத்திரங்கள்

Image
1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழி வாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது. 2.யாரையும் இளக்காரமாகப் பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். 3.நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லி விட்டுச் செல்லுங்கள். 4.'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்.. 5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக் கட்டுங்கள் அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். 6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அது தான்.. 7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.. 8.பிறரைத் தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.. உங்களைப் பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.. 9. எதிரே வருபவரின் தகுதிய...