'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!'
பறவைகள் பழங்காலந்தொட்டே மனிதர்களுடன் தொடர்பில் உள்ளவை.புறாக்கள் தகவல் தொடர்புகாக பயன்படுத்தப்பட்டது.காக்கை சமூக நல்லிணக்க குறியீடு ஆகும்.மேலும் காலையில் விழிக்கையில் காக்கை,மைனா, குயில் மற்றும் குருவிகளின் ரம்மிய குரலில் மயங்கி எழுகிறோம்.ஆனால் நாளடைவில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.மேலும் கோடை காலங்களில் பறவைகள் நீரின்றி உணவின்றி
சிரமப்படுகின்றன.கிரமங்களை விட நகரங்களில் உள்ள பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது.நகர வாசிகள் ஆகிய நாம் நம்மால் இயன்றதை செய்ய முற்படுவோம்.நம் முன்னோர்கள் பறவைகளுக்கு உணவிடும் நற்பண்புகள் கொண்டுருந்தனர்.அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறிப்பாக காக்கைக்கு உணவிடுவர்.அக்குறிப்பிட்ட நாட்களில் உணவிட்டாலே நன்மை ஏற்படும் என்பர்.நாம் அனைத்து நாட்களும் அவைகளுக்கு உணவு கிடைக்கும்படி செய்தால் அளவில்லாத நன்மை கிடைக்குமல்லவா!.மேலும் பறவைகள் தூய்மை பணியாளர்கள் ஆகவும் செயல்படுகிறது. நாம் தூக்கி எறியும் கழிவுகள் மற்றும் உயிரற்ற விலங்குகளின் உடல்கள் ஆகியவற்றை உண்டு சுத்தம் செய்கின்றது.மேலும் அவைகள் மரம் நடும் செயலையும் சிறப்பாக செய்கின்றன.மரத்தில் உள்ள வேப்பம்பழம் மற்றும் அரசம்பழம் போன்ற பல பழங்களை விதையுடன் உண்டு செரித்து பின் பல இடங்களில் பறந்து எச்சமிடுகின்றன.அந்த எச்சத்திலிருக்கும் விதையிலிருந்து பல அழகான மரங்கள் வளர்கின்றன.இவைகள் சிறந்த இயற்கை சூழலை உருவாக்கி மனித சமுதாயத்திற்கு பரிசாக வழங்குகிறது. எனவே இவைகளுக்காக நம் வீட்டில் உபயோகமில்லாத சில போருட்களை வைத்து உணவு கப்பிகளை தயார் செய்யலாம்..
நாம் செய்யும் சிறிய முயற்சியும் பெரிய பல பலனை தரவல்லது.மரங்களை தினமும் நடமுடியவில்லை என்றாலும் மரம் நடும் பறவைகளுக்கு உணவிட்டு அதில் பங்கெடுப்போமாக!..

Comments
Post a Comment