Posts

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் உறுப்பினராக ...!!

Image
நல வாரிய  உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்..  தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி  ஒரு பார்வை? தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள் 1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம். 3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், 4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் 5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம். 6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம் 7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம் 8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம். 9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம். 10. தமிழ்நாடு ஓ...

தமிழே வாழ்க!!!

Image
அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! இதை படித்து பாருங்கள் 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....! 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...! 1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... ! 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்...

தமிழ் விடுகதைகள் ...

Image
பொழுது போகலியா? நிதானமா May 03 க்குள் விடையை கண்டு பிடியுங்க. விடுகதை விளையாட்டு 1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? 3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? 4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;     விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம். 5. தாளைக் கொடுத்தால் தின்னும்;     தண்ணிர் குடித்தால் மடியும். 6. சின்ன மச்சான் - என்னைக்     குனிய வச்சான். 7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்     பார்க்க முடியவில்லை. 8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,     ஆடை நெய்யும், தறியும் அல்ல. 9. சூடுபட்டுச் சிவந்தவன்,     வீடுகட்ட உதவுவான். 10. பட்டையைப் பட்டையை நீக்கி,       பதினாறு பட்டையை நீக்கி,       முத்துப் பட்டையை நீக்கி,       முன்னே வாராள் சீமாட்டி. 11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை. 12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,       உரிக்க உரிக்கத் தோலாண்டி. 13. எண்ணும் முள்ளும் இல்...

மனதை வருடும் கதைகள்...

Image
என்னங்க மூட்டை ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன் ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க. சைக்கிள் ல போவேன் ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்...

பட்டா தொடர்பான அரிய தகவல்கள்

Image
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. *#பட்டா_மாற்றம்*  : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது) 2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்) 3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்) தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும், விதிமுறைக...