Posts

Showing posts with the label ஒரு கதை சொல்லட்டுமா?

மனதை வருடும் கதைகள்...

Image
என்னங்க மூட்டை ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன் ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க. சைக்கிள் ல போவேன் ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்...

நம்பிக்கை

Image
யோசிக்க வைக்கும் சிறு கதை !!!         ஒரு இருட்டு அறை... அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.   அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன. காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.  அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!! அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.  கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது. என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!  இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது. அந்த போராட்டம் சில நிமிடங்...

வாழ்வின் கடைசி காலங்களில்......!

Image
ஒருவரின் பணிஓய்வுக்குப்பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ள உதவும். 1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகிவிட்டது போல் உணர்வீர்கள். அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் 2.  காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம். நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி வயதான மனிதராக மாற்றிவிடும் நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங...

மிக அழகான பதிவு...!

Image
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,  மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.  “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவ...